நேபாளத்தில் தேசிய விடுமுறை அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!
நேபாளத்தில் இன்று பெய்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலச்சரிவில் வீடொன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் மேலும் 05 பேர் தனித்தனியாக இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், மீட்புப் பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தின் வானிலை அவதானிப்பு நிலையம் சனிக்கிழமை முதல், வரும் திங்கட்கிழமை வரை கடுமையான மழை பொழியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





