அளவிற்கு அதிக எலுமிச்சை ஜூஸ் பேராபத்து
வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது என்பதோடு, சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிட்ரஸ் பழமான எலுமிச்சையின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இதனுடன், எலுமிச்சை நமது செரிமானத்தை வலுப்படுத்தி, வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை போக்கும்.
இந்தியாவின் பிரபல சுகாதார நிபுணர் நிகில் வாட்ஸ், எலுமிச்சை ஜூஸ் அதிகமாக குடிப்பது ஏன் நம் உடலுக்கு நல்லதல்ல என்று கூறினார்.வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து என்றாலும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ள நிலையில், இந்த சத்து நம் உடலில் அதிகரித்தால், அது சிறுநீரகம் மற்றும் எலும்பு உள்ளிட்ட பல முக்கிய உறுப்புகளை பாதிக்கிறது, எனவே பல மருத்துவர்களும் இதை அளவோடு உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
சிறுநீரக கல் பிரச்சனை: அளவிற்கு அதிகமான வைட்டமின்-சி உணவுகளை எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏனெனில் உடலில் சேரும் கூடுதல் வைட்டமின்-சி சத்தினை ஆக்சலேட் வடிவில் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. ஆனால், சில சமயங்களில் மற்ற தாதுக்களுடன் கலந்து சிறு படிகங்களாக மாறி சிறுநீரகக் கல்லாக மாறுகிறது.
எலும்புகளின் அசாதாரண வளர்ச்சி: உடலில் அதிகப்படியான வைட்டமின்-சி, அசாதாரண எலும்பு வளர்ச்சியை ஏற்படுத்தும். மூட்டுகளில் அசாதாரணமாக வளரும் எலும்புகள் காரணமாக வலி, பலவீனம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
செரிமான பிரச்சனை: அளவிற்கு அதிக வைட்டமின் சி காரணமாக, வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கலாம். அதோடு எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் உள்ளவர்கள் எலுமிச்சை தண்ணீரை குறைவாக குடிக்க வேண்டும்.
வாய் புண்கள்: தேவைக்கு அதிகமாக எலுமிச்சை ஜூஸ் குடித்தால், அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வாய்வழி திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாயில் வலி, புண்கள், எரிச்சல் ஏற்பட ஆரம்பிக்கும்.
பலவீனமான பற்கள்: சாக்லேட் போலவே, எலுமிச்சை ஜூஸை அதிகம் குடிப்பதால், பற்கள் வலுவிழக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.