இங்கிலாந்தில் இரசாயனத் தாக்குதலால் பரபரப்பு? பலர் மூச்சுத்திணறலால் பாதிப்பு
இங்கிலாந்தின் பாத் நகரில் உள்ள ஸ்டால் செயின்ட்க்கு அருகில் பெண்ணொருவர் பை ஒன்றுடன் மக்களை அணுக, சிறிது நேரத்தில் பலருக்கு மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அது ரசாயனத் தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தீங்கு விளைவிக்கும் பொருளை வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் 73 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, உடனே அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவ உதவிக்குழுவினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கொரோனா காலகட்டத்தில் அணிந்ததுபோல உடல் முழுவதும் மறைக்கும் வகையில் பாதுகாப்பு உடை அணிந்த மருத்துவ உதவிக்குழுவினர், பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டோரின் உடைகளை அகற்றி அவர்கள் மீது தண்ணீரை பாய்ச்சியுள்ளனர்.
ஸ்டால் ஸ்டில் உள்ள லா பாகுட் உட்பட கார்டனுக்குள் உள்ள கடைகள் அன்றைய தினம் மூடப்படும் என்று கூறப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.