இஸ்ரேலின் இராணுவ தளங்களை குறிவைத்து தாக்கிய ஹிஸ்புல்லாஹ் குழு!
லெபனான் ஹிஸ்புல்லாஹ் குழு தனது மூத்த தளபதி ஒருவரைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலில் உள்ள பல இராணுவ தளங்கள் மீது 200இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் பல மாதங்கள் நீடித்த மோதலில் மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
லெபனானில் இருந்து “ஏராளமான எறிகணைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்குகள்” தங்கள் எல்லைக்குள் நுழைந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
இருப்பினும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் தெற்கு லெபனானில் உள்ள பல்வேறு நகரங்களைத் தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 7 times, 1 visits today)