மீண்டும் ஜனாதிபதியின் தீர்மானத்தை நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது.
அரசியலமைப்பு சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணைக்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
சட்டமா அதிபரின் சேவைக்காலம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இரண்டு தடவைகள் கூடிய போதிலும் இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியவில்லை.
சட்டமா அதிபருக்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவை நீடிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்திருந்தார். இதன்படி, சட்டமா அதிபர் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் இன்றுடன் (26) நிறைவடையவிருந்தது.