இலங்கை ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையில் உறுமயவின் இலவசக் காணி உரிமைத் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக தகவல்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்கும் “மரபுரிமை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட மக்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இலவச காணி உறுதிப்பத்திரம் வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் காணி உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.
இதேவேளை தகுதியான 20,000 பேரில் 1,758 பேருக்கு அடையாளமாக நிலப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
(Visited 3 times, 1 visits today)