நெருக்கும் தேர்தல் : சரிவை சந்தித்த பிரித்தானிய பொருளாதாரம்! சுனக்கிற்கு காத்திருக்கும் நெருக்கடி
ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் அறிக்கையின் படி இந்த மாதத்தில் எந்த வளர்ச்சியையும் பதிவு செய்யவில்லை, கடந்த ஆண்டின் இறுதி பாதியில் விழுந்த மந்தநிலையிலிருந்து வெளியேறி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து பொருளாதாரம் அதன் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்த பின்னர் இந்த மந்தநிலை வந்துள்ளது.
இந்நிலையில் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக முக்கிய அரசியல் கட்சிகளுக்கு பொருளாதாரம் ஒரு முக்கிய போர்க்களமாகும்.
காலப்போக்கில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அளவிடும் இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மார்ச் மாதத்தில் 0.4% வளர்ந்துள்ளது.
தேர்தல் நேருக்கு நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
லிபரல் டெமாக்ரட் கட்சியின் கருவூல செய்தித் தொடர்பாளர் சாரா ஓல்னி, “ரிஷி சுனக் பிரதமராக இருந்த காலத்தைப் போலவே, இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியும் குறைகிறது” என்று கூறியுள்ளார்.