கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த நாடு இலங்கை – ஃபோர்ப்ஸ் சஞ்சிகை
ஃபோர்ப்ஸ் இதழ் இலங்கை, கிரீஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய மூன்று நாடுகளை இந்த கோடையில் கட்டாயம் பார்க்க வேண்டிய மூன்று நாடுகளாக பெயரிட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த பயண இடமாகவும், இலங்கையில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், உலகின் சுற்றுலாத் துறையானது அதன் கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சர்வதேச அளவில் 285 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும் என்று ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் பெருமளவிலான அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் சர்வதேச அளவில் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த கோடையில் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவைத் தவிர்க்க வேண்டும் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.