IPL Match 08 – சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்
ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது.
இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார்.
மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார்.
அவர் 24 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.
இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அணியாக அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது.
இதற்கு முன்பு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.