பிரித்தானியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 70 வயது முதியவர் மரணம்
 
																																		பிரித்தானியாவின் டான்காஸ்டரில்(Doncaster) நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும், 41 வயது விமானி, பயணிகளான 58 வயது பெண் மற்றும் 10 வயது சிறுவன் லேசான காயங்களுக்கு ஆளாகி உள்ளதாக தெற்கு யார்க்ஷயர்(South Yorkshire) காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் நாட்டிங்ஹாம்ஷையரில்(Nottinghamshire) உள்ள ரெட்ஃபோர்ட் கேம்ஸ்டன்(Redford Camden) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறுது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.
“மருத்துவ ஊழியர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும்” விபத்து நடந்த இடத்திலேயே முதியவர் இறந்துவிட்டதாக தெற்கு யார்க்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்துக்கான காரணங்களை கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெற்கு யார்க்ஷயர் காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) தெரிவித்துள்ளது.
 
        



 
                         
                            
