மத்தியப் பிரதேசத்தில் உணவு விஷத்தால் 3 பேர் மரணம்
மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) கஜுராஹோவில்(Khajuraho) உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவு விஷத்தால் 3 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் பலர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதியில் ஊழியர்கள் நேற்று இரவு உணவை சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலுதவிக்காக கஜுராஹோ(Khajuraho) சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் பின்னர் அவர்களின் நிலை மோசமடைந்ததால் சத்தர்பூர்(Chhatarpur) மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.





