ஹர்ஷவை களமிறக்கும் சஜித்: நாளை நடக்கப்போவது என்ன?
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகின்றது.
எதிரணி தரப்பில் இருந்தே விவாதம் ஆரம்பித்து வைக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் பொருளாதார விவகாரங்களைக் கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் ஆகிய இருவரில் ஒருவர் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றவுள்ளனர்.
இதன்போதே வரவு- செலவுத் திட்டம் தொடர்பான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதேவேளை, வரவு- செலவுத் திட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு முன்வைக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சபைக்கு வருகை தந்துள்ளனர்.





