வீரகெட்டியவில் இடம்பெற்ற மோதலில் 8 பொலிஸார் மற்றும் 2 பொதுமக்கள் காயம்

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததாக கூறப்படும் மோதலில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு இன்று (06) மாலை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று விஜயம் செய்திருந்த வேளையில் சந்தேகத்தின் பேரில் வீதியோரம் காத்திருந்த நபர்களை சோதனையிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர்கள் தங்களை சோதனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சம்பவம் கைகலப்பாக மாறுவதற்கு முன்னர் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.
சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தன
(Visited 13 times, 1 visits today)