ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீனாவிடம் வலியுறுத்தும் ஜேர்மனி!
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சீனாவிடம் வலியுறுத்தும் ஜேர்மனி!
ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதை தவிர்க்குமாறு ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜேர்மன் பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு பதிலாக உக்ரேனில் இருந்து ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு மாஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக நாடு தற்காத்துக் கொள்ள ஜேர்மனி மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகளுடன் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நேட்டோவின் 2 சதவீத பாதுகாப்பு செலவின இலக்கை அடைவதில் ஜெர்மனி செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசாங்கம் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் எனறும் கூறினார்.