இலங்கை

யாழில் நடந்த சோகம் – பெண்ணின் உயிரை பறித்த ஆட்டிறைச்சி

யாழ்ப்பாணத்தில் ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.

“கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது.

அதனால் அவர் வாழைப்பழம் சாப்பிட்டுள்ளார். எலும்பு மார்பு பகுதி வரை இறங்கி சிக்கிக்கொண்டுள்ளது.

மறுநாள் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். அவரது வாய் ஊடாக கமரா செலுத்தி ஆராய மருத்துவர்கள் முற்பட்டுள்ளனர். எனினும் அதற்கு அனுமதிக்காத குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை குருதி வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

கமரா மூலம் பார்த்தபொழுது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி ஏற்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் இன்று மேற்கொண்டார்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!