இலங்கை செய்தி

மியான்மாரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இவற்றில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் என்பன அடங்கும் இதனை மியான்மருக்கான இலங்கைத் தூதர் திருமதி மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் திரு. சாவ் பியோ வின் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆகியோர் இந்த ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கை விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா மற்றும் விமானப்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!