இந்தியா செய்தி

திருமணம் செய்ய மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி..மனமுடைந்து விபரீத முடிவெடுத்த 17 வயது மாணவர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டேவின் பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (17). கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மனோகர், 10ஆம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால், குறித்த மாணவி காதலை ஏற்க மறுத்ததால் மனோகர் கல்லூரிக்கு செல்லாமல், லொறி கிளீனர் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனோகர் அந்த மாணவியை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். தனக்கு 16 வயது தான் ஆவதாகவும், 10ஆம் வகுப்பு படிப்பதாகவும் கூறி குறித்த மாணவி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மனோகர் நேற்று முன்தினம் தான் வேலை பார்த்து வந்த லொறியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது லொறியின் சக்கரம் அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே மனோகர் உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!