கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்
தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic surgery) செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.
25 வயது Saharat Sawangjaeng என்பவர் Seong Jimin என்ற கொரியப் பெயரில் வலம் வந்தார்.
அவர் தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் சென்ற வாரம் பிடிபட்டுள்ளார்.
அவரை 3 மாதங்களாகத் தேடி வந்ததாகவும் அவரின் உண்மையான முகம் முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்மீது சட்டவிரோத போதைப்பொருள் இறக்குமதிக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Ecstasy போதைப்பொருளை இணையம் மூலம் வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.
Saharat ஏற்கனவே 3 முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் விசாரணை அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் முகத்தில் அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்டார்.