காதல் முறிவால் மாணவி எடுத்த தவறான முடிவு

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த மதவாச்சியி பாடசாலை மாணவி ஒருவர் காதல் உறவின் அடிப்படையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவியுடன் சிறிது காலம் காதல் உறவில் ஈடுபட்டு வந்த வேறொரு பாடசாலை மாணவர் தனது உறவை முறித்துக் கொண்டதையடுத்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாணவியின் தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவி தந்தையின் பராமரிப்பில் இருந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)