ஜெர்மனி மக்களுக்கு பொதிகள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை
ஜெர்மனி நாட்டில் பொதிகள் விநியோகிப்பது தொடர்பாக புதிய நடவடிக்கை ஒன்றை அமைச்சர் அறிவித்திருக்கின்றார்.
உலகளாவிய ரீதியில் இணையத்தளங்களில் ஊடாக பொருட்கள் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் நடவடிக்கையானது தற்பொழுது அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஜெர்மனியில் பொதிகள் வழங்குவது அதாவது பார்சல் வழங்கும் விடயத்தில் ஜெர்மனியின் தொழில் அமைச்சரானவர் புதியதொரு சட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக கூறி இருக்கின்றார்.
அதாவது பார்சல் வழங்குகின்றவர்கள் 20 கிலோவிற்கு மேற்பட்ட இடையுள்ள பொதிகளை வழங்குவதற்கு தனியே அவர்கள் சென்று இவ்வாறு இந்த பொதிகளை உரியவரிடம் ஒப்படைக்க முடியாது என்று அவர் கூறியிருக்கின்றார்.
அதாவது 20 கிலோவிற்கு மேற்பட்ட பொதிகளை தனி நபர் ஒருவர் உரியவரிடம் ஒப்படைக்கும் போது அவருக்கு உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் காரணத்தினால் எதிர்வரும் காலங்களில் இவ்வாறு 20 கிலோக்கு மேற்பட்ட இடை உள்ள பொதிகளை உரியவரிடம் வழங்கும் பொழுது இருவர் சேர்ந்து செல்ல வேண்டும் என்ற திட்டத்தை தான சட்ட ரீதியாக கொண்டு வர முயற்சிப்பதாக கூறியிருக்கின்றார்.
இதேவேளையில் 10 கிலோக்கு மேற்பட்ட இடையுள்ள பொதிகளுக்கு விஷேட குறியீடுகளை போட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.