இலங்கை செய்தி

குழந்தை கண்முன்னே நீர்வீழ்ச்சியில் குதித்த தாய்

குடும்ப தகராறு காரணமாக திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான லெச்சுமன் நிஷாந்தனி (வயது 34) என்பவர் டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார்.

குடும்பத் தகராறு தொடர்பில் இரண்டு பிள்ளைகளுடன் திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து நான்கு பிள்ளைகளின் தாய் தனது ஒரு குழந்தையுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்று குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாயுடன் சென்ற குழந்தை மீண்டும் பொலிஸாரிடம் ஓடிவந்து தாய் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்ததாக கூறியதை அடுத்து, குதித்ததாக கூறப்படும் நான்கு பிள்ளைகளின் தாயை கண்டுபிடிக்க திம்புல பத்தனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை