புவி வெப்பமயமாதலை விட அணு வெப்பமயமாதலே தற்போதுள்ள பிரச்சினை – ட்ரம்ப் கருத்து!

புவி வெப்பமயமாதல் பிரச்சினையை விட அணு வெப்பமயமாதல் பிரச்சினைதான் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், அணுசக்தி பற்றி யாரும் பேசுவதில்லை. உலகம் முழுவதும் நமக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை புவி வெப்பமடைதல் அல்ல. அணு வெப்பமயமாதல்.
இவ்வாறன ஒரு நிகழ்வு நடக்க 200 முதல் 300 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒரு சில வினாடிகளில் நடக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவின் அணு ஆயுத திறன் மற்றும் உக்ரைனில் அதன் தாக்கம் குறித்து ட்ரம் கவலை வெளியிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)