தற்காலிக கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் தற்காலிக கொட்டகையின் மீது ஒரு பெரிய மரம் விழுந்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோவிலுக்கு வெளியே மத விழாவிற்காக கூடியிருந்தனர் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் தற்காலிக கட்டிடத்தின் மீது மரம் விழுந்ததில் 35 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
அப்பகுதி மக்கள், மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்டனர்.
இதில் சிக்குண்டவர்களில் ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.