ஜப்பான் பிரதமர் தாக்குதலின் சந்தேக நபர் தேர்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது புகைக்குண்டு வீசிய சந்தேக நபர், மேல்சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அநியாயமாகத் தடை செய்யப்பட்டதாகக் கூறி, அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரிய பதிவை வைத்திருந்ததாக ஜப்பானின் பிரபலமான யோமியுரி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
ரியூஜி கிமுரா கடந்த ஜூன் மாதம் கோப் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன், ஜூலை 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தனது வயது மற்றும் 3 மில்லியன் யென் ($22,339) டெபாசிட் செய்ய இயலாமை காரணமாக அவர் போட்டியிட முடியாது என்று கூறி, வழக்கு பதிவு செய்திருந்ததாக மேற்கோள் காட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.
24 வயதான சந்தேக நபர் தனக்கு ஏற்பட்ட மன வேதனைக்காக 100,000 யென் இழப்பீடு கோரிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது என்று Yomiuri அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கிமுரா ஒசாகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாகவும், மேலும் இந்த ஆண்டு மே மாதம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
வாகயாமா நகரில் தனது தேர்தல் உரையின் போது கிஷிடாவை வெடிகுண்டுப் பொருளால் தாக்க முயன்றதாகக் கூறி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹியோகோவில் உள்ள கவானிஷி நகரில் உள்ள கிமுராவின் வீட்டை ஜப்பானிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனர். அவர் மீது இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.