இலங்கை

கோட்டாவிற்காக பாரிய அளவிலான பணத்தை செலவிடும் ரணில் அரசாங்கம்!

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கமைய செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரிஇ ஓய்வூதியம் எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!