இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு – செட்டியார் தெருவில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் இதனை தெரிவித்தார்.
மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 480 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக 15,000 முதல் 17,000 ரூபா வரையில் தங்கம் குறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)