உலகம் செய்தி

இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ தளபதி மரணம்

ஆகஸ்ட் மாதம் ஏமனின் ஹவுதி (Houthi) கிளர்ச்சித் தலைவர்களை குறிவைத்து நடத்திய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது அப்துல் கரீம் அல்-கமாரி (Mohammed Abdul Karim al-Qamari) உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் அல்-கமாரி இறந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் இருந்த பயங்கரவாதத் தலைவர்களின் வரிசையில் மற்றொரு தலைமைத் தளபதி அகற்றப்பட்டார்” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹவுத்திகள் தங்கள் SABA செய்தி நிறுவனம் மூலம் மரணத்தை உறுதிப்படுத்தினர், அல்-கமாரி தனது 13 வயது மகன் ஹுசைன் மற்றும் பல தோழர்களுடன் “ஜிஹாதி தாக்குதலின்” போது இறந்ததாக குறிப்பிட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி