X தளத்தை உலுக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ₹12.5 பில்லியனுக்கு மேல் அபராதம்!
தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, எலான் மஸ்கிற்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ (முன்னர் ட்விட்டர்) மீது ஐரோப்பிய ஒன்றியம் மோசடி குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது சமூக ஊடகத் தளமான ‘X’ இல் உள்ள அதன் நீல டிக் (Blue Checkmark) அமைப்பு தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (EU) €120 மில்லியன் (சுமார் 1080 கோடி இந்திய ரூபாய்) அபராதம் விதிக்க முடிவெடுத்துள்ளது.
ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission) கூற்றுப்படி, X தளத்தின் நீல டிக் அமைப்பு பயன்படுத்துவோரை ஏமாற்றும் விதமாக (Deceptive) வடிவமைக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், இந்தத் தளத்தைக் கொள்வனவு செய்த பின், உண்மையான அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்பட்ட நீல டிக்கை, தற்போது மாதாந்திரச் சந்தா (Paid Subscription) செலுத்தும் எவரும் பெற முடியும் என மாற்றினார்.
பணம் செலுத்தினால் எவருக்கும் நீல டிக் கிடைக்கும் என்பதால், ஒரு கணக்கின் நம்பகத்தன்மை (Authenticity) குறித்து பயன் படுத்துவோர் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. இது இணையதள மோசடிக்கு வழிவகுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.
X-ன் சமூகத்தளத்தின் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான இணையதள பாதுகாப்புச் சட்டமான டிஜிட்டல் சேவைகள் சட்டம் (Digital Services Act – DSA) மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாகக் கருதப்படுகிறது.
மேலும், X நிறுவனம் தனது தளத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்த நம்பகமான தரவுக்குரிய தளத்தை வழங்கத் தவறியது மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பொதுத் தரவை அணுகுவதைத் தடுத்தது போன்ற குறைபாடுகளும் அபராதத்திற்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த அபராதம் குறித்து எலான் மஸ்க் பதிலளிக்கையில், “தங்கள் அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவாகச் செயல்பட X மறுத்ததாலேயே ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை எடுக்கிறது” என்று குற்றம் சாட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சட்டப் போர் தொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.





