பிறந்த மண்ணுக்கு (பாகிஸ்தானுக்கு) எதிராக உலக சாதனை படைத்த அப்பாஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் மொகமட் அர்சலான் அப்பாஸ் சர்வதேச ஒரு நாள் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.
21 வயதான நியூசிலாந்து அணியின் வீரான இவர் மிக வேகமான அரைச்சதத்தை அடித்துள்ளார்.
தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடிய இவர் 24 பந்துகளில் இவர் அரைச் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
அத்துடன் 26 பந்துகளில் இவர் 52 ஓஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்துள்ளார்.
இதற்கு முதல் இச்சாதனையை இந்திய அணியின் சகலத்துறை வீரர் குரூனால் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிராக நிலைநாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் 2021 ஆம் ஆண்டில் 26 பந்திகளில் 50 ஓட்டங்களைப் பெற்று இச்சாதனை படைத்திருந்தார்.
பாகிஸ்தான் லாகூரில் பிறந்தஅர்சலான் அப்பாஸின் தந்தை பாகிஸ்தானுக்காக முதல் தர போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியது.