இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி ரூ. 50 மில்லியன் டொலர் நிதி உதவி
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் அரசாங்க சேவைகள் நவீனமயமாக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வணிகங்கள் அரசாங்க சேவைகளை ஒரே இணையத்தளத்தின் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
குறிப்பாக, அரச நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வதற்கும், டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கும் புதிய நவீன தரவுத் தளங்கள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த நிதி ஒதுக்கீடானது இலங்கையின் அரச நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் துறையில் புதிய முதலீடுகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





