மகளிர் உலகக் கோப்பை – இலங்கை அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பையில் நடைபெற்ற 21வது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக ஹாசினி பெரேரா (Hasini Perera) 85 ஓட்டங்களும் சமரி அத்தப்பத்து (Chamari Athapaththu) 46 ஓட்டங்களும் நிலக்ஷி டீ சில்வா (Nilakshi de Silva) 37 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இந்நிலையில், 203 ஓட்ட வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது.
வங்கதேசம் சார்பில் ஷர்மின் அக்தர் (Sharmin Akhter) 64 ஓட்டங்களும் நிகர் சுல்தானா (Nigar Sultana) 77 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
புள்ளி பட்டியலின் படி, இலங்கை அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றியை பதிவு செய்து ஆறாவது இடத்திலும் வங்கதேசம் அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றியை பதிவு செய்து ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும், 2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகளுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றுள்ளது.