மகளிர் உலகக்கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 17வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று வங்கதேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அந்தவகையில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.
வங்கதேசம் சார்பில் சோபனா மோஸ்டரி (Sobhana Mostary) 66 ஓட்டங்களும் ருப்யா ஹைடர் (Rubya Haider) 44 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இந்நிலையில், 199 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி (Alyssa Healy) மற்றும் போப் லிட்ச்பீல்ட் (Phoebe Litchfield) ஆகியோர் தமது விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.
24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்களை அடித்து ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அலிசா ஹீலி 113 ஓட்டங்களுடனும் போப் லிட்ச்பீல்ட் 84 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.





