Womens WC – தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 251 ஓட்டங்கள் குவித்த இந்தியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 10வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மந்தானா மற்றும் பிரதிகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இவர்களை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்கள் குவித்துள்ளது.





