சீனாவில் பாம்புகள் நிறைந்த கிணற்றில் 54 மணி நேரம் உயிருக்கு போராடி உயிர் தப்பிய பெண்
சீனாவின் பூஜியனில் கடுங்குளிர், பாம்புக்கடி, பசியை பொறுத்துக்கொண்ட பெண் ஒருவர் 54 மணிநேரம் கிணற்றுக்குள் போராடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
13ஆம் திகதி நடைப்பயிற்சி சென்ற சின் என்ற பெண் தடுமாறிக் கிணற்றுக்குள் விழுந்தள்ளார்.
சின் வீடு திரும்பவில்லை என்று வருந்திய குடும்பத்தினர் அவரை தேடத் தொடங்கினர். 15ஆம் திகதி அவர்கள் அங்குள்ள மீட்பு நிலையத்தின் உதவியை நாடியுள்ளனர்.
இரு நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் சிக்கிக்கொண்ட சின்னை அவர்கள் கண்டுபிடித்தனர்.
ஒரு மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் சின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன், பாம்புக்கடி, பூச்சிக்கடி ஆகியவற்றையும் அவர் அனுபவித்திருந்துள்ளார்.
எனினும் அவை நச்சுப் பாம்புகள் அல்ல என்பதனால் அவர் உயிர் தப்பியுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சின் சீரான நிலையில் இருப்பதாகவும் இன்னும் சில நாள்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.





