ஈரானின் அடுத்த அதிபர் யார்: உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்
ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களிற்கு இடையில் கடும் போட்டி நிலவுவது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் கடும்போக்காளர் சயீட் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர்மசூட் பெசெக்கியானிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது – இருவரும் சுமார் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முதல் சுற்று வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 50% வாக்கை யாரும் பெறவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெஜேஷ்கியன் 9.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் ஜலிலியை விட 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இரண்டு வேட்பாளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும்.