இலங்கையில் வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் – 7000 முறைப்பாடுகளை பதிவு செய்த மக்கள்

இலங்கையில் பொலிஸ் தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, வட்ஸ்அப் இலக்கத்துக்கு முறைப்பாடுகள் குவிந்துள்ளது.
இதுவரை சுமார் 7,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
அவற்றில், பொலிஸார் தொடர்பான அனைத்து முறைப்பாடுகள் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கு உடனடி தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க, அண்மையில் 071 8598 888 என்ற வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற சில முறைப்பாடுகள் பொலிஸாருடன் தொடர்புடையவை அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் போது பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் குறிப்பிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.