போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த சலுகைகளையும் வழங்கமாட்டோம் – ரஷ்யா உறுதி!
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா எந்த பிரதேச சலுகைகளையும் வழங்காது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தற்போது கைபற்றியுள்ள டான்பாஸ் (Donbas), கிரிமியா (Crimea), நோவோரோசியா (Novorossiya) ஆகிய பகுதிகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergei Ryabkov) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வொஷிங்டன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து கிரெம்ளினுடன் விவாதிக்கவில்லை எனக் கூறிய அவர், வளர்ந்து வரும் அமைதி ஒப்பந்தம் குறித்த பொது உரையாடல்களை நிராகரித்துள்ளார்.
இதேவேளை தெற்கு துறைமுகப் பகுதியான ஒடேசாவில் ரஷ்யா தொடர்சியாக தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இதனால் 2800 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பதாக கூறப்படுகிறது.





