ககோவ்கா அணை தகர்ப்பிற்கு ரஷ்யா தான் காரணமா? : ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்!

ககோவ்கா அணை அழிக்கப்பட்டமைக்கு ரஷ்யா தான் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில், தொலைப்பேசி அழைப்பை இடைமறித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ககோவ்கா அணை தகர்ப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி உக்ரைனின் பாதுகாப்பு சேவை அதன் டெலிகிராம் சேனலில் கூறப்படும் உரையாடலின் ஒன்றரை நிமிட ஆடியோ கிளிப்பை வெளியிட்டது.
அதில், ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர், பேரழிவின் பின்னணியில் தங்கள் நாசவேலை குழு இருந்ததாக ஒப்புக்கொண்டதாக கூறுகின்றனர். இந்த அணை தகர்ப்பு விவகாரம் திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றாலும், அதை விட அதிகமாகவே சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)