ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறியது தவறா? : மக்களின் நிலைப்பாடு என்ன?
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து வாக்களித்து இன்றுடன் (23.06) ஏழு ஆண்டுகளாகியுள்ளது.
டோனி பிளேர் இன்ஸ்டிடியூட் மற்றும் டெல்டாபோல் இணைந்து நடத்திய ஆய்வில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வாக்களித்த 18 வீதமானோர் தற்போது தங்கள் தவறை உணர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பில் பங்கேற்ற 80 வீதமானோர் பிரித்தானியா, ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் பேங்க் ஃஒப் இங்கிலாந்து தனது வட்டி விகிதத்தை ஐந்து வீதமாக உயர்த்தியது. இதனையடுத்து பிபிசி நேரலையில் பிரெக்சிட் குறித்த ஒரு ஆய்வையும் நடத்தியது.
இந்த ஆய்வில் 20 வீதமானோர் வித்தியாசமாக வாக்களிப்பதாக கூறனர். 70 வீதமானோர் தங்களுடைய கருத்துக்களை மாற்றிக் கொள்ளவில்லை. 10 வீதமானோர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.