4 மாதங்களின் பின் லண்டனில் இருந்து நாடு திரும்பிய விராட் கோஹ்லி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோலி (Virat Kohli), 4 மாத இடைவெளியின் பின்னர் நேற்று இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.
லண்டனில் குடும்பத்துடன் ஓய்வை கழித்த அவர், இங்கிலாந்தில் இருந்து நேராக புதுடெல்லி (New Delhi) விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கு அவரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் கூட்டத்தை தவிர்த்து, சீக்கிரமாக தனது காரில் ஏறி சென்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின் பின்னர், மனைவி அனுஷ்கா சர்மா (Anushka Sharma) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
தற்போது டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
விராட் கோலி மற்றும் இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா (Rohit Sharma), எதிர்வரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான மூத்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடர் ஒக்டோபர் 19ஆம் திகதி பெர்த் (Perth) மைதானத்தில் தொடங்குகிறது. இதையடுத்து, 23ஆம் திகதி அடிலெய்ட் மற்றும் 25ஆம் திகதி சிட்னியில் போட்டிகள் நடைபெறும்.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு விராட் கோலி (Virat Kohli) மிகப்பெரிய சவாலாக இருப்பார் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவரின் அனுபவமும், ஆட்டத்திறனும், இந்திய அணிக்கு முக்கிய பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.





