விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டம் – உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று மருத்துவமனையில் உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)





