காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட சுமார் 200 துருப்புகளை அனுப்பவுள்ள அமெரிக்கா
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட அமெரிக்கா சுமார் 200 துருப்புக்களை இஸ்ரேலுக்கு அனுப்புகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமை(09) செய்தி வெளியிட்டன.
இப்பணிக்குழு மேற்பார்வையிடும், கண்காணிக்கும், ஒப்பந்த மீறல்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யும் என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் எகிப்து, கத்தார் மற்றும் துருக்கிய ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் அமெரிக்க குழுவில் இணைக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
பணிக்குழு காசாவில் இருக்காது என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.





