சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ( Pete Hegseth) தலைமையில் நேற்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 70இற்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், 100 வெடிமருந்துகள் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ராக்கெட் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
டிசம்பர் 13 அன்று சிரியாவின் பால்மைராவில் (Palmyra) அமெரிக்கப் படைகள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஜோர்டானிய போர் விமானங்களும் தாக்குதல்களில் பங்கேற்றதாக அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
ஜனாதிபதி டிரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா, எங்கள் மக்களைப் பாதுகாக்க ஒருபோதும் தயங்காது, ஒருபோதும் பின்வாங்காது எனவும் பீட் ஹெக்ஸெத் ( Pete Hegseth) குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் எஞ்சியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் படைகள், அவர்களின் உள்கட்டமைப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதப் பகுதிகளை அகற்றுவது ஆகியவை இந்த பதிலடித் தாக்குதல்களின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டின்படி, சிரியா மற்றும் ஈராக்கில் இன்னும் 1,500 முதல் 3,000 வரை ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் செயல்பட்டு வருகின்றனர்.





