செய்தி வட அமெரிக்கா

கொலம்பிய ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா சபை 80வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் பேசிய கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ, காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு டொனால்ட் ட்ரம்ப்பும் உடந்தையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ Xல், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி