வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடரும் அமெரிக்கா – அதிகரித்த எண்ணெய் விலை!
அமெரிக்கா வெனிசுலா நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை கைப்பற்றிய பிறகு இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.
புதிய நிலவரங்களின் படி கச்சா எண்ணெய் 34 சென்ட்கள் அல்லது 0.6% உயர்ந்து பீப்பாய்க்கு $56.86 ஆக பதிவாகியுள்ளது.
வெனிசுலாவிற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலா எண்ணெய் விநியோகத்தின் மூலம் ஈட்டும் வருமானத்தை போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பசுபிக் பெருங்கடலில் ரோந்து நடவடிக்கையை அமெரிக்க கடற்படையினர் முடக்கிவிட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வெனிசுலா, ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் வளங்களைத் திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வார நிலவரப்படி, வெனிசுலாவின் கடல் பகுதியில் அல்லது நாட்டை நெருங்கி வரும் 80 கப்பல்களில் 30 க்கும் மேற்பட்டவை அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





