இலங்கை விவகாரங்களில் தலையிடும் அமெரிக்கா
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் செயற்பாடுகள் தொடர்பில் எழுத்துமூலம் தமது கவலைகளைத் தெரிவிக்க தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (31) வெளிவிவகார அமைச்சுக்கு விஜயம் செய்தது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நாட்டின் உள்விவகாரங்களில் பலத்த செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், அரசியல் விவகாரங்கள் அமெரிக்காவை பொறுத்தே நடைபெறுவதாகவும் தேசப்பற்றுள்ள தேசியவாத முன்னணியின் சட்டத்தரணி நுவான் பலந்துடாவ தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை இராணுவத் தளபதி மற்றும் ஏனைய அதிகாரிகளையும் சந்தித்து அறிவுறுத்தல்களை வழங்கியதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
“வெளிவிவகார அமைச்சருக்கு அமைச்சின் தூதுவரை அழைத்து அவரது நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.