உலகம் செய்தி

54 ஹரியானா ஆண்களை இந்தியாவிற்கு நாடு கடத்திய அமெரிக்கா

சட்டவிரோத வழியாக நாட்டிற்குள் நுழைந்ததாகக் கூறி, இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.

அவர்கள் அனைவரும் OAE-4767 விமானம் மூலம் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-3ஐ வந்தடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடு கடத்தப்பட்டவர்களில், 16 பேர் கர்னாலைச்(Karnal) சேர்ந்தவர்கள், 15 பேர் கைதாலைச்(Kaithal) சேர்ந்தவர்கள், 5 பேர் அம்பாலாவைச்(Ambala) சேர்ந்தவர்கள், 4 பேர் யமுனா(Yamuna) நகரைச் சேர்ந்தவர்கள், 4 பேர் குருக்ஷேத்ராவைச்(Kurukshetra) சேர்ந்தவர்கள், 3 பேர் ஜிந்த்(Jind), 2 பேர் சோனிபட்டைச்(Sonipat) சேர்ந்தவர்கள் மற்றும் பஞ்ச்குலா(Panchkula), பானிபட்(Panipat), ரோஹ்தக்(Rohtak) மற்றும் ஃபதேஹாபாத்தைச்(Fatehabad) சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

நாடுகடத்தப்பட்ட இந்த நபர்கள் சட்டவிரோத கடினமான மற்றும் ஆபத்தான பாதைகள் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக இந்திய அதிகாரி சந்தீப் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நூற்றுக்கணக்கான மக்கள் அமெரிக்க அதிகாரிகளால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். குடியேற்றச் சட்டங்களை மீறுபவர்கள் அல்லது நாட்டில் தங்குவதற்கு எந்த சரியான அடிப்படையும் இல்லாத நபர்களை அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து நாடு கடத்துகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்(Donald Trump) பதவியேற்ற பிறகு, நாட்டின் சட்ட அமலாக்க முகமைகள் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

(Visited 4 times, 4 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி