இரண்டு இந்தியர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா
அமெரிக்கர்களுக்கு சட்டவிரோத மற்றும் போலி மருந்துகளை விற்பனை செய்யும் ஆன்லைன் மருந்தகங்களை நடத்தியதாக இரண்டு இந்தியர்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.
அமெரிக்காவில் ஃபென்டானில் மற்றும் மெத்தம்பேட்டமைன் நிரப்பப்பட்ட போலி மாத்திரைகளை விற்பனை செய்த 39 வயது அப்பாஸ் ஹபீப் சயீத், 34 வயது கிசார் முகமது இக்பால் ஷேக் மற்றும் இவர்களது கேஎஸ் இன்டர்நேஷனல் டிரேடர்ஸ் ஆன்லைன் மருந்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை தளமாகக் கொண்ட இருவரும் டொமினிகன் குடியரசு மற்றும் அமெரிக்காவில் உள்ள கடத்தல்காரர்களுடன் இணைந்து போலி மாத்திரைகளை உற்பத்தி செய்து வந்துள்ளனர்.
இணைய தளங்கள் வழியாக அமெரிக்கர்களுக்கு போலி மாத்திரைகளை விற்ற குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் சையத் மற்றும் ஷேக் ஆகியோர் அடங்குவர்.
அமெரிக்காவில் அல்லது அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் பணத்தையோ அல்லது சொத்தையோ அணுக அல்லது பயன்படுத்த இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.





