ஜப்பானில் வரலாறு காணாத அளவு பாதிப்பு – கை, கால், வாய்ப் புண் நோயால் தவிக்கும் மக்கள்

ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு கை, கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் எண்ணிக்கை இருப்பதாக ஜப்பானின் தேசியத் தொற்றுநோய்க் கழகம் கூறியது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் 35,960 சம்பவங்கள் பதிவாகின. சுத்தத்தைப் பேணுவதில் அக்கறை காட்டுமாறு ஜப்பானியச் சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக்கொண்டது.
கைகளில், கால்பாதங்களில், வாய்க்குள் கொப்பளங்களை ஏற்படுத்தும் அந்தக் கிருமித்தொற்று பொதுவாக 5 வயதுக்குக் குறைவான பிள்ளைகளை அதிகம் தாக்குகிறது.
காய்ச்சல், பசியின்மை, உடல்சோர்வு, தோலில் தடிப்புகள், தொண்டை வலி ஆகியவை அந்நோயின் அறிகுறிகள்.
(Visited 22 times, 1 visits today)