உக்ரைன் போர் – புட்டின் மற்றும் ட்ரம்ப் இடையேயான சந்திப்பு நிறுத்தம்!
 
																																		ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டர்ம்ப் (Donald Trump) ஆகியோரத்து திட்டமிட்ட சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் புடாபெஸ்டில் (Budapest) சந்திப்பார்கள் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது.
போர் நிறுத்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக உக்ரைன் கூடுதல் பிரதேசத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மொஸ்கோ வலியுயுறுத்தி வருகிறது.
பிராந்திய சலுகைகள், உக்ரைனின் ஆயுதப் படைகளில் கூர்மையான குறைப்பு மற்றும் உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் சேராது என்பதற்கான உத்தரவாதங்களையும் புட்டின் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தகவல் தொடர்பில் வெள்ளை மாளிகையும், கிரெம்ளினும் மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
